கருணாநிதி பிறந்த நாளில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
கருணாநிதி பிறந்த நாளில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்;
கருணாநிதி பிறந்த நாளில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காந்திநகர் பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் தலைமையில் கருணாநிதியின் தெரு உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் பஜாரில் உள்ள அண்ணா சிலை முன்பு கருணாநிதியின் திருவுருபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் வழங்கினார். அதேபோல பாளையம்பட்டியிலும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.