அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மூன்று இளைஞர்கள் கைது-தலைமறைவாகியுள்ள மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு*

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மூன்று இளைஞர்கள் கைது-தலைமறைவாகியுள்ள மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு*;

Update: 2025-06-03 13:12 GMT
சாத்தூர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மூன்று இளைஞர்கள் கைது-தலைமறைவாகியுள்ள மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஜெகதீஸ்வரன் (25) மற்றும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி நள்ளிரவு கிருஷ்ணமூர்த்தி வீடு மற்றும் அவரது உறவினர் சௌந்தர் வீடுகளில் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களான மதுரை கல்மேடு ஆகாஷ் (20), 17-வயது சிறுவன் மற்றும் ஹார்பி (22), செல்வகணபதி (20), வெற்றிலையூரணி அகிலன் (20) ஆகியோர் இணைந்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் உயிர் தப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த ஜெகதீஸ்வரன் (25), அவரது நண்பர்களான ஆகாஷ், அகிலன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னுடைய பெற்றோர்கள் முன்பாக தன்னை அவமரியாதை செய்த காரணத்தினால் அவர் வீடு மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள மற்ற மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Similar News