விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது;

Update: 2025-06-04 09:10 GMT
மதுரைக்கு விமானத்தில் வரும் பயணிகள் உடல்நிலையை ஸ்கேனர் வெப்பமானி மூலம் பரிசோதனை இன்று (ஜூன்.4) நடைபெறுகிறது. இருமல் காய்ச்சல் தலைவலி போன்றவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சைக்காக வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கொரானா பாதிப்பின் அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தனிமை படுத்தப்படுவார்கள். சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று அறிக்கையில் பொதுமக்கள் காய்ச்சல் தலைவலி இருமல் போன்றவற்றை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி, கிரிமி நாசினிகளை கொண்டு கைகளை கழுவி கொள்வது போன்றவை கடைபிடித்தால் கொரோனாவின் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

Similar News