திட்டப் பணிகள் ஆய்வு கூட்டத்தில் மதுரை எம்பி

மதுரை மேலூரில் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மதுரை எம்பி வெங்கடேசன் கலந்து கொண்டார்.;

Update: 2025-06-04 13:17 GMT
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஒன்றியத்திகு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் .4) கொட்டாம்பட்டியில் மதுரை எம்.பி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. க்கூட்டத்தில் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ரானா, மதுரை மாவட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் இந்து மதி, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளிடம் வளர்ச்சி திட்டப் பணிகளை கேட்டறிந்து அமலாக்கத்திற்கான கால இடைவெளிகளையும், தேவையான முன்னெடுப்புகளையும் கவனப்படுத்தப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத்திட்ட உறுதி , ஜல் ஜீவன் திட்டம் மூலம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கு தடையற்ற குடிநீர் இரண்டும் கூட்டத்தின் மையக் கருவாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி சங்கர் கைலாஸ், ஆகியோர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேலூர் தாலுகா செயலாளர் ஏ.தனசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், பி.எஸ்.ராஜாமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News