காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா
மதுரை திருமங்கலத்தில் மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது;
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம் .அதன் அடிப்படையில் இத்திருவிழாவின் நான்காம் நாளான இன்று ( ஜூன் .4)இரவு ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.