பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த எம்.பி.

மதுரை கொட்டாம்பட்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேற்று எம்பி ஆய்வு செய்தார்.;

Update: 2025-06-05 01:13 GMT
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் நடைபெற்ற அரசின் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மதுரை எம.பி வெங்கடேசன் கொட்டாம்பட்டியில் ரூ.4 கோடியே,90 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியினை பார்வையிட்டார் .90 சதவீதம் பணிகள் முடிவடைந்து பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் தேவையான அடிப்படை வசதிகள் குறிததும் ஆலோசனைகள் வழங்கினார். உடன் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ரானா, மதுரை மாவட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் இந்துமதி, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சங்கர் கைலாஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News