சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாய் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.மதுரையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந் ததால் வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்து.அதற்கு சிகிச்சையும் பெற்றும் குறையவில்லை . தொடர்ந்து வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில் நேற்று முன்தினம் (ஜூன்.3) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.