கிரிக்கெட்டில் அசத்தும் பெரம்பலூர் இளம் பெண் வீராங்கனைகள்

சின்மயி அறிவுச்செல்வன் 73 பந்துகளில் 178 ரண்களை குவித்தார் இதில் 24 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். மேலும் சுபநீதா சரவணன் 76 பந்துகளை சந்தித்து 55 ரண்களை குவித்தார் இதில் 7 பௌண்டரிகள் அடங்கும். திருமதி பூங்குழலி அவர்கள் 34 பந்துகளை சந்தித்து 37 ரண்களை குவித்தார்;

Update: 2025-06-05 03:37 GMT
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் நேற்று பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெரம்பலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 344 ரண்களை குவித்தது பெரம்பலூர் அணி சார்பாக அணித்தலைவர் சின்மயி அறிவுச்செல்வன் 73 பந்துகளில் 178 ரண்களை குவித்தார் இதில் 24 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். மேலும் சுபநீதா சரவணன் 76 பந்துகளை சந்தித்து 55 ரண்களை குவித்தார் இதில் 7 பௌண்டரிகள் அடங்கும். திருமதி பூங்குழலி அவர்கள் 34 பந்துகளை சந்தித்து 37 ரண்களை குவித்தார் இதில் நான்கு பௌண்டரிகள் அடங்கும். அதன் பின்னர் பந்து வீச துவங்கிய பெரம்பலூர் அணி, அணியை 102 ரண்களுக்கு அனைத்து விக்கெட் களையும் கைப்பற்றி 242 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. பெரம்பலூர் அணியில் சுபநீதா சரவணன் அவர்கள் எட்டு ஓர்களை வீசி 5 மெய்டன்கள் உட்பட 11 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . ரீனா ராம்கி அவர்கள் 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட ஒரு 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணியினர் வெற்றி பெற்றதை பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Similar News