உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மோட்டார் வாகனங்களின் தீமையை உணர்த்தவும்
மிதிவண்டி பயன்பாட்டின் முக்கியத்துவதை உணர்த்தும் வகையில் மிதிவண்டி பேரணி;
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெட்ரோல் வாகனங்களின் மூலம் அதிக காற்று மற்றும் ஒளி மாசுபாடு ஏற்படுவதை உணர்த்துவதற்கும். மிதிவண்டி பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலும், நாகை ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் நேற்று மிதிவண்டி பேரணி நடைபெற்றது. ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி வாசலில் பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியர் சிவா தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், மிதிவண்டிகளில் மாணவர்கள் கோஷமிட்டபடி சென்றனர். ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி வரை சென்ற பேரணி, மீண்டும் ஒரத்தூர் கிராமத்தின் தெருக்கள் வழியாக பள்ளியை வந்தடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கி.பாலசண்முகம் செய்திருந்தார்.