உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
மதுரை அருகே உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது;
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணியில் 'மரங்களை வளர்ப்போம்' 'நெகிழியை தவிர்ப்போம்' 'சுற்றுச்சூழல் காப்போம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணி முடிவில் 2025 ஆம் ஆண்டின் கருப்பொருளான நெகிழிப்பை முறியடிப்போம் என்ற உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் வழங்கிய மரங்களை தனது வீட்டில் சிறப்பாக வளர்த்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்று நெகிழிப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊராட்சி மன்றத்திற்கு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. பள்ளி வளாகத்தில் மக்கும் மக்காத குப்பைகளுக்கு தனி தனி தொட்டிகள் பராமரிக்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மாணவர்கள் கைகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுச்சூழல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அனுசியா நன்றி கூறினார்.