பாஜக சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்.

ஆரணி பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி போதிமரம் முதியோர் இல்லத்தில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-06-06 05:31 GMT
ஆரணியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி போதிமரம் முதியோர் இல்லத்தில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலையின் 41 வது பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி- வாழைப்பந்தல் சாலையில் உள்ள போதிமரம் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் சரவணன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நகரபொதுச்செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மேலும் இதில் விண்ணமங்கலம் பாரத்ராஜ், நிர்வாகிகள் கிழக்கு மண்டல நிர்வாகி சரவணன், வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, சேவூர் ராஜேஷ், தெற்கு மண்டல நிர்வாகி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News