இந்தி பயின்றால் இந்தியா முழுவதும் எந்த பணியிலும் சேரலாம். ஆரணியில் ஏ.சி.சண்முகம் தகவல்.
ஆரணி டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.சி.எஸ் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏ.சி.சண்முகம் இந்தி பயின்றால் இந்தியா முழுவதும் எந்த பணியிலும் சேரலாம் என்று செய்;
ஆரணி ஆரணி டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.சி.எஸ் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏ.சி.சண்முகம் இந்தி பயின்றால் இந்தியா முழுவதும் எந்த பணியிலும் சேரலாம் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆரணி டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப்பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி, கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப்பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியது, மேலும் இந்த ஆண்டு முதல் ஆரணியில் டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு இதில் பிசியோதெரபி, பாராமெடிக்கல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், நிர்வாகம், வணிகவியல் போன்ற பிரிவுகளில் 2025- 26 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையும் வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என சிலர் கூறி வருகின்ரனர். ஆனால் இந்தி பயின்றால் ரயில்வே, ஏர்போர்ட், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெல் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் இந்தியா முழுவதும் பணிகள் செய்யலாம். ஆகையால் 3வது மொழியாக இந்தி பயின்றால் உடனடி வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இனி நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சிக்கென 6 அல்லது 7 தொகுதிகளை கேட்போம். அதில் புதிய நீதிக்கட்சியினரை போட்டியிட வைத்து வெற்றி பெறுவோம். என்று கூறினாரக். உடன் எம்ஜிஆர் நிகர்நிலைப்பல்கழக டீன் பி.ஸ்டாலின், டி.கார்த்திகேயன், இணை பதிவாளர் வி.பெருவழுதி, பள்ளி இயக்குனர் எஸ்.விக்னேஷ், பள்ளி முதல்வர்கள் ஆர்.ராஜலட்சுமி, அருளாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.