குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (65). இவர் கடந்த 14 ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானர். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் பின்னால் அமைந்துள்ள மணக்குளம் பகுதிக்கு அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் சுற்றி பார்த்தபோது, இன்று குளத்தின் அருகில் ஒரு எலும்பு கூடு ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அந்த எலும்பு கூடை ஆய்வு செய்த போது அது 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான தேவராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த எலும்பு கூடுகளை அட்டை பெட்டியில் எடுத்து கொண்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தானாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் .