கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதி சாரம் பகுதியில் அருள்மிகு திருவாளி மார்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பத்துநாட்கள் திருவிழா நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேரோட்டம் பிரதான வீதியில் ஊர்வலமாக பொதுமக்களால் இழுத்து செல்லப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிலை நிறுத்தப்படும். இந்நிகழ்ச்சி பல்வேறு பகுதியிலிருந்து பெருங்கூட்டமாக மக்கள் வந்து பார்த்து திருவாழிமார்பன் அருள் பாலித்து செல்வர். தற்சமயம் திருக்கோயில் திருவிழா முடிந்து பல நாட்களாகியும் இதுவரை திருத்தேரை பாதுகாப்பாக வைக்காமல் தற்போது பெய்து வரும் மழையிலும் வெயிலிலும் திருத்தேர் நிறுத்தப்படுவதால் திருத்தேர்தரம் பாதிக்கப்படும் என பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இந்து அறநிலைத்துறை திருத்தேரை கவசம் அணிந்து பாதுகாப்பாக நிலை நிருத்தவேண்டி திருவாழிமார்பன் பக்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.