வேலூரில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்!
வேலூரில் தடை செய்யப்பட்ட 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு தலா 500 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.