ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் அம்மன் சிரசு ஊர்வலம்.
ஆரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.;
ஆரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. ஆரணி நகரம், ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு ஜூன் 3 அன்று பக்தர்கள் காப்பு கட்டி கரகம் எடுத்து ஊர்வலம் சென்றனர். பின்னர் தினமும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு சிரசு ஊர்வலத்தினை துவக்கி வைத்து அம்மனை வழிபட்டார். மேலும் அம்மன் சிரசு ஊர்வலம் பெரியகடை வீதி, வடக்கு மாடவீதி, காந்திரோடு வழியாக ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்திற்கு சென்றடைந்தனர். பின்னர் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் அதிமுக சேர்ந்த ஆரணி நகர செயலாளர் ஏ.அசோக்குமார், ஆரணி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகர மன்ற உறுப்பினர் ரம்யாகுமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.வாசு,நகர பேரவை இணை செயலாளர் இ.முனிரத்தினம், ஒன்றிய நிர்வாகி எம்.மணிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ராஜ்கமல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பேட்டை தெரு பகுதி மக்கள் செய்திருந்தனர்.