பைக்கில் கனிமவள லாரி மோதி வாலிபர் சாவு

குழித்துறை;

Update: 2025-06-07 03:33 GMT
குமரி மாவட்டம் திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார். இன்று 7ம் தேதி வெளிநாட்டிற்கு செல்ல உள்ள நிலையில் நேற்று இரவு தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். குழித்துறை சந்திப்பு பகுதியில் வைத்து இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கனிம வளம் ஏற்றி கேரளாவிற்கு சென்று கொண்டு இருந்த டாரஸ் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிர் இழந்தார். இதனால் இங்கு குவிந்த ஊர்மக்கள் ஆத்திரமடைந்து கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு எதிராக காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து களியக்காவிளை போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் தனது இரு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்க சென்றவர் கனிமவள வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Similar News