தபால்நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் புதிய ஆதார் அட்டை
புதிப்பித்தலுக்கு சிறப்பு ஆதார் அட்டை முகாம் 10-ம் தேதி தொடக்கம்;
நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அமைந்துள்ள கீழ்கண்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வருகிற 10-ம் தேதி திருப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், 11-ம் தேதி பில்லாளி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், 12-ம் தேதி மூங்கில்குடி தபால் நிலையத்திலும், 13-ம் தேதி ஆலத்தூர், விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற அலுவலத்திலும், 18-ம் தேதி திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், 19-ம் தேதி சூரனூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 25-ம் தேதி வடகரை மைதீன் ஆண்டவர் பள்ளிவாசலிலும், 26-ம் தேதி பூதமங்கலத்திலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 5 முதல் 15 வயது நிரம்பியவர்களுக்கான ஆதார் அட்டை புதுப்பித்ததுக்கு கட்டணம் கிடையாது. குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை பதிய கட்டணம் கிடையாது. பெற்றோர் தங்கள் அசல் ஆவணங்களுடன், குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். புகைப்படம், கைரேகை மாற்றம் செய்ய ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற திருத்தங்களுக்கு தகுந்த அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.