பாறையில் வழுக்கி விழுந்து ஐடிஐ மாணவர் பலி 

அருமனை;

Update: 2025-06-07 11:15 GMT
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மகன் ஆதித்யன் (20). இவர் அந்த பகுதியில் ஐடிஐ படித்து வந்தார். நேற்று மாலை நண்பர்கள் 11 பேருடன் குமரி மாவட்ட  பகுதியான அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் இறங்கி குளித்தனர். கருப்பையாற்றின் பகுதியில் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே தவறி விழுந்த ஆதித்யன்   தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்தியன்  இறந்து விட்டதா கூறினார். இந்த சம்பவம் குறித்து வெள்ள றடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News