குமரி மாவட்டம் திருவட்டாறு, பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சோமன் நாயர்(58). இவரது மகள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிற்றுகிறார். இவர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வை கடந்த ஜனவரி மாதம் 5.ம் தேதி எழுதியுள்ளார். தேர்வு முடிவை அறிந்து கொள்ள சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 7.ம் தேதி சோமன் நாயர் சென்ற போது அங்கு வேலூரை சேர்ந்த சதீஷ் என்பவர் மருத்துவ தேர்வாணைய தலைவரின் டிரைவராக இருப்பதாக சோமன்நாயரிடம் கூறி பழக்கமானார். 10 நாட்களுக்குப்பின் சதீஷ் தொடர்பு கொண்டு சோமன் நாயரிடம் மகளுக்கு மருத்துவர் வேலை வாங்க அட்வான்ஸ் ஆக 7 லட்சம் ரூபாய் தந்தால் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பி லோகேஷ் குமார்(28) என்பவருடைய என்பவர் வங்கிக்கணக்கில் ஜி. பே மூலம் 6 லட்சம் ரூபாய் அனுப்பிக்கொடுத்துள்ளார். ஆனால் தேர்வு முடிவில் மகளின் பெயர் வரவில்லை. உடனே சோமன் நாயர் பணத்தை திருப்பித்தரும்படி கேட்க சதீஷ் பணத்தை திருப்பித் தர ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று சதீஷ் அனுப்பியதாக லோகேஷ்குமார் சமரசம் பேசுவதற்காக திருவட்டாரில் சோமன்நாயர் வீட்டிற்கு வந்தார். அப்போது தகராறு எற்பட்டதால், ஆட்கள் வரவே லோகேஷ்குமார் ஓடி விட்டர். உடனே திருவட்டார் போலீசில் சோமன் நாயர் புகார் கொடுத்தார். போலீசார் திருவட்டார் அருகே வேலூருக்கு பஸ் ஏற நின்றிருந்த லோகேஷ் குமாரை கைது செயுது தக்கலை நீத்மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.