பல்நோக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஆய்வு!
வேலூர் அரசு பென்ட்லண்ட் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை அரசு முதன்மை செயலாளர் செந்தில் குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் அரசு பென்ட்லண்ட் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தேசிய நல்வாழ்வு இயக்க மேலாண்மை இயக்குநர் அருண் தம்புராஜ், கலெக்டர் சுப்புலட்சுமி, மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.