ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி;

Update: 2025-06-08 01:00 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (75). விவசாயியான இவா் நேற்று மாலையில் தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கோழி ஒன்று கிணற்றில் விழுந்து விட்டதாம். அதை மீட்க அவா் கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News