ஆலங்குளம் அருகே கோயில் மரம் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கோயில் மரம் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நல்லூா் ஊராட்சி காசியாபுரத்தில் உள்ள சுடலைமாடன் - பேச்சியம்மன் கோயிலில் சுமாா் 60 ஆண்டுகள் பழமையான அரச மரம் நின்றது. இந்த மரத்தை அடையாளம் தெரியாத சிலா் வேரோடு வெட்டி சாய்த்து விட்டனராம். இது குறித்து கோயில் நிா்வாகி சுப்பையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.