குமரி மாவட்டம் மாடத்தட்டு விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் மனைவி வர்க்கீஸ் அம்மாள் (75). இவர் நேற்று மாடதட்டுவிளை கான்வென்ட் சந்திப்பு பஸ் நிறுத்தத்திலிருந்து தோட்டியோடு செல்வதாக அரசு பஸ்ஸில் ஏறினார். தோட்டியோடு நிறுத்தத்தில் அவர் இறங்க முயன்ற போது அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகை மாயமாகி இருந்தது. உடனடியாக இது குறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் இடம் கூறிவிட்டு பஸ்சில் தேடி பார்த்தும் ஆனால் நகை கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ நகையை அபேஸ் செய்தது தெரிய வநதது. இது குறித்து வர்கீஸ் அம்மாள் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.