கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் தெப்பதிருவிழா நடைபெறுவது வழக்கம். அதனால் கடந்த 14 ஆண்டுகளாக இந்த தெப்பக் குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாய் ஆக்கிரமிப்பு படியில் சிக்கி பராமரிக்கப்படாததால் தெப்பக்குளமும் பராமரிக்கப்படாமல் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கடலில் வீணாகக் கலந்தது. இதையடுத்து தெப்பக்குளத்தை சீரமைக்க ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியின் தொடங்கப்பட்டது. குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் பொதுமக்கள் சொந்த செலவில் சீரமைத்தனர். இதை அடுத்து நேற்று நள்ளிரவு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தெப்ப திருவிழா நாளை திங்கள்கிழமை நடக்கிறது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோயில் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழாவை நடத்த பக்தர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.