ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் பிரச்சார இயக்கம்.

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் பிரச்சார இயக்கம் நிகழ்ச்சி முதுநிலை விஞ்ஞானி வி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-06-08 04:01 GMT
ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் பிரச்சார இயக்கம் நிகழ்ச்சி முதுநிலை விஞ்ஞானி வி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மைய செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். பயிர் பாதுகாப்பு வல்லுநர் ப.நாராயணன் மத்திய மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், காரிப் பருவத்தில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். கரும்பு இனப்பெருக்க மையத்தின் விஞ்ஞானி முனைவர் டி.லக்ஷ்மிபதி மண்வள மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வின் இறுதியில் வேளாண்மை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Similar News