வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிவகாசியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குழந்தை வேலன் காவடி எடுத்து ஊர்வலம்...

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிவகாசியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குழந்தை வேலன் காவடி எடுத்து ஊர்வலம்...;

Update: 2025-06-08 14:37 GMT
வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிவகாசியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குழந்தை வேலன் காவடி எடுத்து ஊர்வலம்...குழந்தைகளின் கல்வி சிறக்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு வழிபாடு சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு குழந்தை வேலன் காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக முத்தாலம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், அய்யா நாராயணசாமிகோயில் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று திருத்தங்கல் முருகன் கோவிலில் முடிவடைந்தது. சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் நடைபயணத்துடன், பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் வேல்- வேல்- முருகா! வெற்றி வேல் -முருகா!! என்ற சரண கோஷத்துடன் ஆன்மீகப் பாடல்கள் பாடியபடியே, அனைத்து கோயில்களுக்கும் சென்று, நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும், தொழில் வள மேம்பாட்டுடன், அனைவரும் ஒற்றுமையோடு வாழவும், குழந்தைகளின் கல்வி சிறக்கவும், ஆண்டவனை வணங்கி வழிபாடு செய்தனர்..

Similar News