குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள தலக்குளத்தை நம்பி 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாய விளைநிலங்கள் உள்ளது. இக்குளம் தற்போது முழு கொள்ளளவை எட்டியது. இதிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக விவசாயம் செழிக்க தென்தாமரைகுளம் பேரூராட்சி பா.ஜ.,கவுன்சிலர் சுபாஷ் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புரவு தலைவர் ராஜ்குமார் தண்ணீர் வெளியேறும் மதகினை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.