குமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய மக்கள் நலக் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு, புக் வழங்கப்பட்டது. ஏழை மாணவ மாணவியருக்கு பள்ளிகளுக்கு தேவையான நோட்டு,புக் போன்றவற்றை வாங்குவதில் உள்ள சிரமத்தை போக்கும் விதமாகவும், அவர்கள் பள்ளிப்படிப்பு தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மாநிலத் தலைவர் டாக்டர் சிவகுமார், ஆலோசனைப்படி மாநிலத் துணைத் தலைவரும் மாவட்ட தலைவருமான வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் நேற்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு,புக் ஆகியவைகளை வழங்கினார். உடன் நகரத் தலைவர் நாராயணன். ஐடி விங்க்ஸ் மாவட்டத் தலைவர் ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஊடகப்பிரிவு சுரேஷ்குமார், இளைஞர் அணி விஷால் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.