கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயில் வைகாசி விசாக ஆண்டு திருவிழா தேரோட்டம்
பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தில், பழமை வாய்ந்த அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது இக்கோயில், குழகர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில், வைகாசி விசாக ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின், முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தீபதூப ஆராதனைகளுக்கு பிறகு, முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருள, பக்தர்கள் அரோகரா அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். விழாவில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் உபயதாரர்கள் உட்பட ஆயிரக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.