எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு

சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருள தீர்த்தவாரி;

Update: 2025-06-09 13:28 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருள சரவணப் பொய்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பக்தர்கள் பால்காவடி மற்றும் ரதக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News