நண்பனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பணத் தகராறில் நண்பனை அடைத்துக் கொண்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு;

Update: 2025-06-10 01:34 GMT
தர்மபுரி மாவட்டம் மாரவாடி பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய சௌத்ரி என்பவரும் மற்றும் அவரது நண்பரும் உறவினருமான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பசுமையா என்பவரும் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் பணத்தகராறு ஏற்பட்ட நிலையில் ஆதித்யா சௌத்ரி சுத்தியால் பசுன்யாவை அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்த வழக்கு மதிகோன் பாளையம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு நிலையில் தலை மறைவான ஆதித்ய சவுத்ரியை பெங்களூருவில் கைது செய்தனர் இது குறித்த வழக்கு தர்மபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆதித்யா சௌத்ரி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா திர்ப்பு வழங்கினார்.

Similar News