விருத்தாசலம்: புதிய பேருந்து தொடங்கி வைப்பு
விருத்தாசலம் பகுதியில் புதிய பேருந்து தொடங்கி வைக்கப்பட்டது.;
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வழித்தடம் எண்.18 விருத்தாசலம் - எடையூர் செல்லும் பேருந்து மற்றும் வழித்தடம் எண்.35 விருத்தாசலம் - பெரியகாப்பான்குளம், நெய்வேலி செல்லும் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் புதிய பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களுக்கு செல்ல விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அலுவலர்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.