புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்
புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்;
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்தனர் 3 நாட்கள் நடக்கும் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று திருத்தேர் நிலை பெயர்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப் பட்டது. நாளை காலை 2 ம் நாளாக திருத்தேர் வடம் பிடிக்கப் படும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 14 நாட்கள் நடக்க உள்ள வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவான இன்று திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் தேர் இன்று வடம் பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற தலைவர் திருச்செங்கோடு மேற்கு நகர செயலாளர் நடேசன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கிருஷ்ணன், முன்னாள்அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, கோவில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி காந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில் மற்றும் கொமதேக நிர்வாகிகள் ஆகியோர் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் ஊர் கவுண்டர் ராஜா கொத்துக்காரர் அன்பரசன் பெரிய ஓங்காளியம்மன் கோவில் நிர்வாகி முத்து கணபதிஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருத்தேர் 3 நாட்கள் வடம் பிடிப்பது வழக்கம். முதல் நாளான இன்று திருத்தேர் நிலைபெயர்க்கப் பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. நாளை காலை இரண்டாம் நாள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும். நாளை மறுநாள் நிலை சேர்க்கப் படும். அதன் பின்னர் பரிவார தெய்வங்களுடன் அர்த்தநாரீஸ்வரர் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.