பெண் காவலரின் மனிதாபிமானம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  நடக்க முடியாமல் சுருண்டு விழுந்த பெண்மணியை பார்த்து ஓடிச் சென்று  தவிய ஆயுதப்படை பெண் காவலர்:;

Update: 2025-06-10 14:00 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி.  இவர்  சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர்.    நடக்க முடியாத காலுக்கான காலணி  (ஷூ) வாங்குவதற்காக மயிலாடுதுறை   சமூக நலத்துறைக்கு தனியாக வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக வாயிலில் படி ஏறும்போது கால் நரம்பு பிடித்த இழுத்ததால் நடக்க முடியாமல் கீழே விழுந்தபோது  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த (சந்தியா) என்ற ஆயுதப்படை பெண்காவலர் ஓடோடி சென்று அந்தப் பெண்மணியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து முதலுதவி செய்தார்.  அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் முதலுதவி செய்தார் இந் நிலையில் பைரவியால் நடக்க முடியாததால்   108 ஆம்புலன்ஸ் மூலம்  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்காவலரின் சமயோஜித உதவி  அனைவரின் பாராட்டை பெற்றது.

Similar News