விடியற்காலையில் கொட்டிய கனமழை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் விடியற்காலையில் கொட்டிய கனமழை;

Update: 2025-06-11 01:44 GMT
அரபிக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்று தமிழகம் ஊடாக செல்வதால் தமிழகத்தில் தற்போது பரவலாக பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிந்து வரும் சூழலில் தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பொழிந்துள்ளது மேலும் ஜூன் 11 இன்று விடியற்காலை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், பெரும்பாலை, அக்ரஹாரம்,நாகராசம்பட்டி, ஒகேனக்கல் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியின் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News