கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்

பாப்பிரெட்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்;

Update: 2025-06-11 02:31 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கதிரிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் இவரது மாட்டை விவசாய கிணற்றின் அருகே மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். அப்போது திடீரென மாடு அருகாமையில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து உடனடியாக பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டனர். விரைந்து செயல்பட்டு மாட்டை மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்

Similar News