அரக்கோணத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு!;
அரக்கோணம் அருகே 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த வீட்டின் அருகே வசிக்கும் 40 வயது கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான கூலி தொழிலாளியை தேடி வருகின்றனர்.