வளர்ச்சி திட்டப்பணிகள் : கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு
சாத்தான்குளம் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்..;
சாத்தான்குளம் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட கூடுகல் ஆட்சியர் ஐஸ்வர்யா இன்று செவ்வாய்க்கிழமை சாத்தான்குளம் ஒன்றிய பகுதிக்கு வந்து வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார். அவர் பள்ளக்குறிச்சி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல பயனாளிகளிடம் வீடு முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். படுக்கப்பத்து ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் தோண்டப்பட்ட புதிய குளம் அமைக்கும் பணி. நர்சரி மரக்கன்றுகள் வளர்க்கும் பணி, பெரியதாழையில் கழிப்பறை மற்றும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அழகப்பபுரம் ஊராட்சியில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் கழிப்பறை மற்றும் நர்சரி மரக்கன்றுகள் வளர்க்கும் பணி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளிடம் வீடு முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா ஆறுமுகநயினார், சுடலை, ஒன்றிய பொறியாளர் அருணா, ஓவர்சீயர்கள் கோபால, பெத்தகாஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி செயலர்கள் ராஜேஷ், சித்ரா, அகினோஸ் ஆபிரகாம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.