அரசு நியாவிலை கடையில் பொருட்கள் வழங்க காலதாமதம், பொதுமக்கள் அவதி

அரசு நியாவிலை கடையில் பொருட்கள் வழங்க காலதாமதம், பொதுமக்கள் அவதி;

Update: 2025-06-11 10:03 GMT
அரசு நியாவிலை கடையில் பொருட்கள் வழங்க ஐடீஸ் எனப்படும் கருவிழி மூலம் வழங்கப்படுவதால் சிக்கல் மற்றும் காலதாமதம் பொதுமக்கள் அவதி அலைகழிப்பு.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நியாவிலை கடையில் இன்று ரேஷன் வாங்க சென்ற பொதுமக்கள் ஐ டீஸ் எனப்படும் கருவிழி கண் திரை மூலம் பொருட்கள் பெற இயலாத நிலையில் விற்பனையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்.தமிழக அரசு நியாவிலை கடைகளில் பயோமெட்ரிக் மூலம் கைவிரல் பதிந்து ரேஷன் பொருட்களை வழங்கி வந்த நிலையில் அதில் பல்வேறு பிரச்சனை உள்ளதாக கூறி அந்த முறையை எடுத்துவிட்டு கடந்த மே மாதம் 26-ஆம் தேதி முதல் ஐ டீஸ் எனப்படும் கருவிழி திரை ஸ்கேன் செய்து அதன் மூலம் ரேஷன் பொருட்கள் வாழங்க அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அன்று முதல் ஒவ்வொரு நாளும் ரேஷன் கடைக்கு வரும் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களில் 6 மற்றும் 7 பேருக்கு மட்டுமே இந்த ஐடீஸ் எனப்படும் கருவிழி ஸ்கேன் பதியாகுவதாகும் மற்ற நபர்கள் பதியாக வில்லை எனவே அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதால் தினந்தோறும் நியாய விலை கடைக்கு வாடிக்கையாளர்கள் வருகை தந்து அலைக்கழிக்க படுகிறார்கள் இதற்கு காரணம் பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் கண்ணில் விழித்திரை அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இந்த ஐடீஸ் ஸ்கேன் முறை பதிவாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே பழைய முறைப்படி பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டுமாய் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News