ராசிபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் புகைப்படம் அனுப்பும் பணி நடைபெற்றது.

ராசிபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் புகைப்படம் அனுப்பும் பணி நடைபெற்றது.;

Update: 2025-06-11 15:09 GMT
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின் பெயரில் மற்றும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்புச் செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, மற்றும் முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா, ஆகியோர் ஆலோசனை வழிகாட்டுதல் பெயரில் ராசிபுரம் நகர மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழகப் பகுதியில் பூத் கமிட்டி குழு புகைப்படங்கள் எடுத்து தலைமைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ராசிபுரம் இரண்டாவது வார்டு 109.வது பூத் கமிட்டி உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கட்சி தலைமைக்கு அனுப்பும் பணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் இரண்டாவது வார்டு கழக செயலாளருமான வழக்கறிஞர் ஜி. பூபதி தலைமை வகித்தார் . இதில் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Similar News