தளி அருகே யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு.

தளி அருகே யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு.;

Update: 2025-06-12 02:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காப்பு காட்டில் 15- க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன. இவை தாசரப்பள்ளி, கொட்டப்பாலம் உட்பட பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜவளகிரி வனத்துறையினர் அந்த யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று காலை கொட்டப்பாலம் பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகளை நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட் டன.

Similar News