கோவை: மூதாட்டியை கடையை எடுக்க சொல்லி அட்டூழியம் !
மூதாட்டியை திமுக நிர்வாகி வாரச்சந்தையில் கடையை எடுக்கச் சொல்லி அட்டூழியம் செய்த வீடியோ வைரல்.;
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே நடைபெற்ற வாரச் சந்தையில், 75 வயதான மூதாட்டி ஒருவர் சிறிய தட்டுகளில் மிளகாய் விற்பனை செய்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சந்தோஷ்குமார் கடையை அகற்றுமாறு வலியுறுத்தி, கடுமையாக திட்டி, வியாபார பொருட்கள் கலாட்டா செய்த வீடியோ வைரலாகியுள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் நடைபெறும் இந்த சந்தையில், திமுக நிர்வாகிகள் சிலர் கடைகளை குத்தகைக்கு எடுத்து, ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், மிளகாய் தட்டுகளை எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. மூதாட்டியின் கண்கலங்கிய தருணத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பிற்கான மத்திய சட்டம் மற்றும் மாநில விதிகளின் கீழ் ஏன் பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.