வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலி
மதுரை திருமங்கலம் அருகே நடந்த வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.;
மதுரை அண்ணாநகர் முருகன்(38) என்பவரது நண்பர்கள் வில்லாபுரம் முத்துக்குமார், நரிமேடு பிரபு, அவனியாபுரம் சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று முன் தினம் (ஜூன் .10) மினி வேனில் விருதுநகர் சென்ற போது மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் மினி வேனை ஓட்டிச் சென்றார். சமத்துவபுரம் அருகே சென்ற போது ஸ்ரீவில்லிபுத்துார் சென்ற வேன் மினி வேன் மீது மோதியதில் மினி வேன் கவிழ்ந்து நால்வரும் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் முருகன் பலியானார். மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துக்குமார் நேற்று (ஜூன் .11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.