குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

மதுரை அருகே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது;

Update: 2025-06-12 08:18 GMT
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார். தலைமை ஆசிரியர் தென்னவன் பேசியதாவது, 'குழந்தைகள் என்பவர் யார்? குழந்தைகள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் உடல் மன நல பிரச்சினைகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டம், குழந்தை தொழிலாளர் எதிர்ப்புச் சட்டம் ஆகியன குறித்து உரை நிகழ்த்தினார். குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் உறுதி ஏற்றனர்‌. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் தினம் பற்றி மாணவி பவித்ரா உரை நிகழ்த்தினார். மாணவி அதிபா குழந்தை தொழிலாளர் குறித்த அவல கவிதை ஒன்றை வாசித்தார். குழந்தை தொழிலாளர் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி வினாடி வினா நடத்தப்பட்டது. சரியான விடை அளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை அருவகம் நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News