உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி உயிரிழந்த கணவன்.
உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி உயிரிழந்த கணவன்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித்தொழிலாளி இவரது மனைவி கவிதா (44) ரங்கசாமிக்கு, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் ரங்கசாமிக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர் வீட்டிற்கு வராமல் அந்த பெண்ணுடன் சுற்றி வந்துள்ளார். கடந்த 9-ஆம தேதி அன்று ரங்கசாமி வீட்டிற்கு வந்தார். மது போதையில் இருந்த அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உறங்க சென்றனர். இதை அறிந்த கவிதா, கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை ரங்கசாமி உயிரிழந்தார். இதை அடுத்து காவேரிப்பட்டணம் போலீசார் தலைமறைவாக உள்ள கவிதாவை வலைவீசி தேடி வருகின்றனர்.