பர்கூர் அருகே கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
பர்கூர் அருகே கற்கள் கடத்திய லாரி பறிமுதல்;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜிட்டோபனப் பள்ளி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் தீபா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம், திருவண்ணாமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்ற டிப்பர் லாரியை அவர்கள் சோதனை செய்தனர். அதில் இரண்டு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து, தீபா பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர், உரிமையாளர் குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.