ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.;

Update: 2025-06-12 23:29 GMT
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குருபரப்பள்ளி, சிக்காரிமேடு ஆகிய பகுதிகளில் தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிக்காரி மேட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நின்ற லாரியை சோத னை செய்த போது அதில் 6 யூனிட் ஜல்லிக்கற்களை சூளகிரியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News