கோவை: தூய்மை பணியாளர்கள் போராட்டம் – அண்ணாமலை நேரில் ஆதரவு
கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்தார்.;
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ரூ.770 தினக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன் நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து, திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கோரிக்கைகள் 2 நாளில் நிறைவேறவில்லை என்றால் பாஜக போராட்டத்தில் இணையும் என தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் நகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.