சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு

மதுரை திருமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2025-06-13 03:52 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலர் தமிழ்செல்வி(56). இவருக்கு 1098 என்ற எண்ணின் மூலமாக சாத்தங்குடி கிராமத்தினை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த மே 28ம் தேதி திருமங்கலம் அருகே அர்ஜூன்(25) என்ற வாலிபருடன் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து தமிழ்செல்வி விசாரணை நடத்தியதில், தகவல் உண்மை என்று தெரியவந்தது. இது தொடர்பாக அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து காவல் ஆய்வாளர் ராதிகா சிறுமியை திருமணம் செய்த வாலிபர் அர்ஜூன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News